களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் கடந்த 30-09-21 தொடக்கம் 03-09-2021 வரையான ஐந்து தினங்களில் 209 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.
களுவாஞ்சிகுடி பிராந்தியபணிமனையின் சுகாதாரவைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப்பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் பிரதேசத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்று (04-09-2021) களுவாஞ்சிகுடி சுகாதாரப்பணிமனையில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள், ஏற்கனவே சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இங்கு 75 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 26 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தொற்றாளர்களை சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தி சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர் : செ.துஜியந்தன்
